கொலைகாரனில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆ‌ஷிமா

கொலைகாரனில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆ‌ஷிமா

1 mins read
315655d1-5d07-4b2c-9d5e-58615b07497b
-

'கொலைகாரன்' படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்துவரும் ஆ‌ஷிமா நெர்வாலுக்கு அப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே 'ராஜபீமா' படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்த ஆரவ், 'ராஜபீமா' என்ற படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். 'சுரபி பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நரேஷ் சம்பத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆரவின் ஜோடியாக ஆ‌ஷிமா நெர்வால் நடிக்கிறார். ஆஸ்திரேலியா நாட்டில் வாழ்ந்து வரும் ஆ‌ஷிமா நெர்வாலின் பூர்வீகம் அரியானாவாம். பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு கவனம் பெற்றுள்ள ஆ‌ஷிமா நெர்வால், 'பீமராஜா'வில் ஆரவின் காதலியாகவும் வன விலங்குகள் ஆர்வலராகவும் நடிக்கிறார். இந்தப் படத்தில் யானையும் ஒரு முக்கிய பாத்திரமாக வருவதால் அதனுடன் நடிக்க ஆ‌ஷிமா இப்போது பயிற்சி எடுத்து வருகிறார்.