நிஜமாக கண்ணீர் சிந்தி அழுதார் ராமையா

நிஜமாக கண்ணீர் சிந்தி அழுதார் ராமையா

1 mins read
5715b2ba-a5f1-41f8-93d2-e105abbc8ab0
-

படப்பிடிப்பின்போது நிஜமாகவே அழுது நடித்த தம்பி ராமையாவை கோடம்பாக்கத்துப் புள்ளிகள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். 'காத்தாடி மனசு' என்ற படத்தில் நடித்து வருகிறார் தம்பி ராமையா. இது அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் அவர் கண்ணீர்மல்க உணர்வுபூர்வமான வசனங்களைப் பேசுவது போல் படமாக்கி உள்ளனர். இந்தக் காட்சியைப் படமாக்கும் போது தான் தம்பி ராமையா உணர்ச்சி வசப்பட்டு நிஜமாகவே கண்ணீர்விட்டு அழுதாராம்.

இப்படத்தில் அவரது தங்கையாக 'பருத்தி வீரன்' சுஜாதா நடித்துள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றவர் தம்பி ராமையா. தற்போது அஜித்தின் 'விஸ்வாசம்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். "சில கதாபாத்திரங்களின் தன்மையை நன்றாக உள்வாங்கி நடிக்கும்போது நாம் அப்பாத்திரமாகவே மாறிப்போகிறோம். எனவேதான் நடிப்பு தத்ரூபமாக அமைகிறது," என்கிறார் தம்பி ராமையா.