ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ரித்விகா

1 mins read
8c05fbc5-605b-4e66-80fa-7a75e13839ee
-

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு ஒரு வாரம் ஓய்வு தேவைப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் ரித்விகா. அதனால்தான் ஒரு வாரம் கழிந்த பிறகு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் தமக்கு ஆதர வளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காணொளிப் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். "பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஏராளமானோர் எனக்கு ஆதரவளித்தீர்கள். இது நான் வெளியே வந்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 'ரித்விகா ரசிகர்கள்', 'ரித்விகா ஆர்மி' (ராணுவம்) என சமூக வலைத்தளங்களில் நிறைய கணக்குகள் தொடங்கி ரசிகர்கள் ஆதரவளித்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி," என்று ரித்விகா குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் தன் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாட இருக்கிறாராம்.