'மீ டூ' இயக்கத்தில் இணையும் நடிகைகள்

'மீ டூ' இயக்கத்தில் இணையும் நடிகைகள்

1 mins read
b56e095f-952d-40be-b913-8b615cbec4bd
-
Google News Preferred Icon

இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா பிரபல திரைப்பட இயக்குநர் நானா படேகர் மீது தெரிவித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து 'மீ டூ' (Mee Too) பிரபலமாகி உள்ளது. தனுஸ்ரீ தத்தாவின் துணிச்சலால் இன்று பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக 'மீ டூ'வில் பதிவிடுகிறார்கள்.

தனுஷ்ஸ்ரீயைத் தொடர்ந்து திரைப்படப் பின்னணி பாடகி சின்மயியும் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். இந்நிலையில் பாடகி சின்மயி விவகாரத்தில், குற்றம் சாட்டப் பட்டவர்கள் கட்டாயம் பதில் அளிக்கவேண்டும். அதே சமயம் 'மீ டூ' பாலியல் புகார்கள் நியாயமான வையாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக் கிறார் நடிகர் கமல்ஹாசன்.

பாலிவுட் தயாரிப்பாளர் கவுரங் தோ‌ஷி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தன்னைத் தாக்கி தாடையை உடைத்ததாக அண்மையில் வெளியான 'ஸ்திரீ' படத்தில் நடித்த ஃபுளோரா சைனி தெரிவித்திருக்கிறார். தனக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனைத் தவிர வேறு யாரும் ஆதரவு அளிக்க வில்லை என்றும் அவர் தெரிவித் துள்ளார். தனு‌ஷின் 'அனேகன்' படத்தில் நடித்திருந்தார் அமிரா தஸ்தூர். அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையைப் பற்றி கூறுகையில், "நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அவர்களின் பெயர்களைச் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை. அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். இருப்பினும், ஒரு நாள் நிச்சயம் நான் அவர்களின் பெயர்களை வெளியிடுவேன்.