நாகசைதன்யா, சமந்தா இருவரும் தங்களது முதல் திருமணக் கொண்டாட்டத்தை அண்மையில் சில வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடினர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட படங்களைத் தனது இணையப் பக்கத்தில் சமந்தா வெளியிட அது சர்ச்சைகளை உருவாக்கியது. அதுபற்றி சிறிதும் கவலைப்படவில்லை சமந்தா. தற்பொழுது வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும் இந்த ஜோடி இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள். ஏற்கெனவே நாகசைதன்யாவுடன் இணைந்து 'ஏ மாய சேஷவே', 'ஆட்டோ நகர் சூர்யா', 'மனம்' ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். காதல் கதையில் உருவாகும் அந்தப் படத்தை சிவா நிர்வானா என்பவர் இயக்குகிறார். இரண்டு நாட்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
காதல் ஜோடியின் படப்பிடிப்பு தொடங்கியது
1 mins read
-

