ராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்

ராட்சசனைக் கைப்பற்றிய விஷ்ணு விஷால்

1 mins read
49bdc76a-1cb5-4afc-ba06-8d5512a5db94
-

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் = அமலாபால் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 'ராட்சசன்' படத்தின் இந்தி மறுபதிப்பு உரிமையை விஷ்ணு விஷால் கைப்பற்றியிருக்கிறார். 'ராட்சசன்' படத்தில் சினிமா இயக்குநராக முயற்சி செய்யும் நாயகன் விஷ்ணு விஷால் தன்னுடைய பாதை மாறி காவல்துறை அதிகாரியாகும் சூழல் உருவாகின்றது. ஆனால் அவர் சினிமாவுக்காக தயார் செய்திருந்த கதையே அவரது வாழ்க்கையில் உண்மையாக நடக்கின்றது.

அதை எப்படிக் கையாள்கிறார் என்பதே கதை. படம் பார்க்கும் ரசிகர்களை நாற்காலியின் நுனியிலேயே உட்கார வைக்கும் 'சைக்கோ த்ரில்லர்' கதையான இந்தப் படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவனைக் கண்டுபிடிக்கப் போராடும் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலா பாலும் காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசைப் பின்னணியில் ஜிப்ரான் அசத்தி இருக்கிறார். படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தின் இந்தி மறுபதிப்பை படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.