ஓய்வுக்குப் பிறகு நடிப்பு

ஓய்வுக்குப் பிறகு நடிப்பு

1 mins read
255de58e-c62e-4617-b4d5-b41332903fef
-

குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது 'சண்டக்கோழி 2', 'சர்கார்' படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

மூன்றாண்டுகளாக சரியான தூக்கம், ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எந்தப் படத்திலும் நான் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். அதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகமாட்டேன். என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கற்றுக் கொண்டிருந்தேன். அதைத் தொடர்வேன். 20 படங்களில் எந்தக் கதை எனக்கு ஒத்துப்போகும் என்பதை ஆராய்ந்து பார்த்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்," என்றார். விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'பைரவா' படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.