வித்தியாசமான படங்களைப் படைக்க விரும்பும் மாரி

வித்தியாசமான படங்களைப் படைக்க விரும்பும் மாரி

2 mins read
e037ed18-12d3-4c9b-a3b7-22f6a8c44846
-

வெற்றிகரமாக மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது 'பரியேறும் பெருமாள்'. இதையடுத்து இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தான் கடந்து வந்த பாதையை, பயணத்தை விவரித்துள்ளார் அவர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியமங்கலம் தான் இவ ரது சொந்த ஊராம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லையாம்.

"வறுமை என்னை தொடர்ந்து துரத்தியது. அதனால் வேறு வழியின்றி படிப்பைக் கைவிட்டேன். சென்னைக்கு போய் பிழைத்துக் கொள்ளலாம் எனும் கனவுடன் ரயில் ஏறினேன்," என்கிறார் மாரி. ஆனால் சென்னை வந்த பிறகு தான் அங்கு வாழ்க்கை நடத்துவதற்குப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது தெரியவந்ததாம். எதையும் சாதிக்காமல் ஊர் திரும்பக் கூடாது என முடிவெடுத்து, துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

"அங்கு மூன்று மாதம், இரவு காவலர் வேலையில் சில மாதங்கள், பெட்ரோல் நிலைய ஊழியர் என கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருந்த நிலையில், ஒரு வீட்டில் உதவியாளர் வேலையில் இருந்தபோது நான் பார்த்த சில திரைப்படங்கள் சினிமா மீதான ஆர்வத்தை தூண்டின. "அதன் பிறகு இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். அவர் எனது சினிமா ஆர்வம், இலக்கியத்தின் மீதான ஆர்வத்தைப் புரிந்து கொண்டு என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொண்டார். அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கி றேன்," என்று நெகிழ்கிறார் மாரி.

படப்பிடிப்பின் போது இயக்குநர் மாரி செல்வராஜ், கயல் ஆனந்தி