சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலட்சுமி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலட்சுமி

1 mins read
959d0b3c-77be-4d46-a62d-dff89fcab9d1
-

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திரையுலகில் குறைந்தபட்ச வாய்ப்புகளாவது கிடைத்து வருகின்றன. அந்த வகையில் சிம்புதேவன் இயக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜயலட்சுமி. இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார். இத்தகவலை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜயலட்சுமி. 'சென்னை 28' படத்தில் நடித்த பெரும்பாலானோர் இப்புதுப் படத்திலும் நடிக்கின்றனர். தனது அபிமான இயக்குநர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி. சிம்புதேவன் கடைசியாக இயக்கிய படம் 'புலி'. இதில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஷ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எனினும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை. சுமார் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார் சிம்புதேவன். இதில் தனக்குரிய வேடம் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.