அசர வைத்த 'சர்கார்' வியாபாரம்

அசர வைத்த 'சர்கார்' வியாபாரம்

1 mins read
b7afbdd3-b449-4807-aba3-c9d15a53e148
-
Google News Preferred Icon

'சர்கார்' படத்தின் வினியோக வியாபாரம் தமிழ்த் திரையுலகத்தினரை அசர வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்துலக வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து தமிழகத்திலும், ஆந்திராவிலும் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனத்திடம் இருந்து பெறுவதில் வினியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறதாம். விஜய் நடித்த 'மெர்சல்' வினியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்ததாகத் தருகிறது. மேலும் 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களாலும் வினியோகஸ்தர்கள் நன்கு ஆதாயம் அடைந்தனர். எனவே முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் வெளியீட்டு உரிமையைப் பெற பெரும் தொகையை கொடுக்க வினியோகஸ்தர்கள் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் 'சர்கார்' வினியோக உரிமை எந்தளவு விலை போயிருக்கிறது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.