ரசிகர்கள் ஆதரவு தேவை - டாப்சி

ரசிகர்கள் ஆதரவு தேவை - டாப்சி

2 mins read
50513294-7b49-40d7-98b7-96190631631f
-

ரசிகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு படமும் வெற்றி அடையாது என்கிறார் நடிகை டாப்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க ஒப் பந்தமாகி உள்ளார் இவர். 'மாயா'வை இயக்கிய அஸ்வின் சரவணன் தான் இயக்குகிறார். படத்துக்கு 'கேம் ஓவர்' என்று தலைப்பிட்டுள்ள னர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகி றது. த ன து பாதுகாப்புக் காகவும் த ன து வீ ட் டி ன் நலனுக்காக வும் போராடும் ஓர் இளம்பெண் ணாக தனது கதா பாத்திரம் சித்திரிக்கப் பட்டிருப்பதாகச் சொல் கிறார் டாப்சி. "நாயகன் அல்லது நாயகியை மையப் படுத்தி உருவாகும் கதைகளில் பெரும் பாலும் அவர்களுக்கு தான் இறுதியில் வெற்றி கிட்டும்.

இயக்குநர் அஸ்வினும் தயாரிப்பாளர் சசிகாந் தும் 'கேம் ஓவர்' படத்துக்காக பல மாதங்களுக்கு முன்பு இவரைத் தொடர்புகொண்டு பேசினராம். வழக்கமான பேய்க்கதை என்றால் தம்மால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் டாப்சி. அதன்பிறகு இயக்குநர் கதையை விவரித்த போது அதன்பால் ஈர்க்கப்பட்டாராம். பிறகுதான் கால்‌ஷீட் ஒதுக்கியிருக்கிறார். தமிழில் நடிப்பதில் ஏன் இடைவெளி ஏற்பட்டது என்று கேள்வி கேட்டால், அதற்கு தான் மட்டுமே காரணம் அல்ல என்பதே டாப்சியின் பதிலாக உள்ளது. "தமிழ் இயக்குநர்கள் ஒரு கதையைச் சொன்ன அடுத்த நாள் முதலே தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்குக் கால்‌ஷீட் ஒதுக்குமாறு கேட்பர். அதற்கு வாய்ப்பே இல்லை. "ஏனெனில் இந்தியில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் ஆறேழு மாதங்களுக்கு முன்பே கால்‌ஷீட் ஒதுக்கிவிடுவோம். திடீரென அதை மாற்றுவது சாத்தியமல்ல. ஆனால் தமிழ் இயக்குநர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை," என்கிறார் டாப்சி.