பெரிய மனதுடன் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி

பெரிய மனதுடன் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி

2 mins read
d0da957b-93f1-4be4-894c-f9d6c70a2d41
-

எந்த வேடத்தில் நடித்தாலும் தனி முத்திரை பதிக்க விஜய் சேதுபதி தவ றுவதே இல்லை. அந்த வகையில் 'சூப் பர் டீலக்ஸ்' படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம். எனவே இந்தப் படம் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம் பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சேதுபதியின் தோற்றத்தைப் பார்த்து இளம் நாயகிகள் பலரும் பொறாமைப்பட்டனராம். எதற்காக என் கிறீர்களா?

இதில் ‌ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சேது பதி. இதுதொடர்பாக சில புகைப் படங்களை படக்குழுவினர் அண்மை யில் வெளியிட்டனர். அவற்றைக் கண்ட கதாநாயகிகள்தான் வெகுவாக ஆச்சரியமடைந்தனராம். இப்படத்தின் நாயகி சமந்தா, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ஆகியோர் விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் பார்த்து எங்களுக்கே பொறாமையாக இருந்தது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளனர். 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜாதான் இப்படத்தின் இயக்கு நர். திருநங்கை ‌ஷில்பா கதாபாத் திரத்தை உருவாக்கிய விதம் குறித்து தம்மால் சரியாக விவரிக்க முடிய வில்லை என்கிறார்.

"இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க சேதுபதி ஒப்புக்கொண்டது உண்மையில் பெரிய விஷயம். இந்தக் கதாபாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர் வெகு வாக மெனக்கெட்டார். அதனால்தான் அவர் தொடர்ந்து ரசிகர்களால் விரும்பப்படுகிறார்," என்று பாராட்டு கிறார் தியாகராஜன் குமாரராஜா. இதற்கிடையே 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவுவதாகத் தகவல். தயாரிப்புத் தரப்பே இதை உலகம் முழுவதும் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத் தத்தில் சேதுபதி ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான நேரம்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இடம்பெறும் காட்சியில் விஜய் சேதுபதி.