'சண்டக்கோழி 2' படத்தில் பின்னணிக் குரல் கொடுத்த கார்த்தி

'சண்டக்கோழி 2' படத்தில் பின்னணிக் குரல் கொடுத்த கார்த்தி

1 mins read
df0cfbcf-c26b-4f21-ae3e-eb138ead8ea0
-

நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பு தொடங்கிய நட்பானது விஷால், கார்த்தி இடையே மென்மேலும் நெருக்கமடைந்து வருகிறது. இருவரும் 'சண்டக்கோழி 2'ல் இணைந்து பணியாற்றி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் இது. இதன் வெளியீட்டை விஷால் ரசி கர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரே‌ஷும் முக்கிய கதா பாத்திரத்தில் வரலட்சுமியும் நடித் துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தியும் இப்படத்தில் பணியாற்றி உள்ளாராம்.

இதுகுறித்து இயக்குநர் லிங்கு சாமி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "சண்டக்கோழி-2' படத்துக் காக பின்னணிக் குரல் கொடுத் துள்ளார் கார்த்தி. இப்படத்தில் இணைந்தமைக்காக அவருக்கு எனது சிறப்பு நன்றிகள்," எனக் கூறியுள்ளார் லிங்குசாமி. இப்பதிவால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பின் னணிக் குரல்தான் கொடுத்தாரா? அல்லது நடித்தும் உள்ளாரா? என்பது விரைவில் தெரியவரும்.