பெப்சி தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படமும் தொழிலாளர்களின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. திடீரென படப்பிடிப்புப் பணிகள் முடங்கியதால் விமலும் வருத்தமடைந்துள்ளாராம். விஷால் நடிக்கும் 'அயோத்தியா', லாரன்ஸ் நடிக்கும் 'காஞ்சனா-3', அதர்வாவின் 'குருதியாட்டம்', விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு' உள்ளிட்ட 20 படங்களின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன.
தொழிலாளர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட விமல் நடிக்கும் புதுப்படம்
1 mins read
-

