'சர்கார்' படத்தை வரவேற்கக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

'சர்கார்' படத்தை வரவேற்கக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

2 mins read
2e49bb06-a442-4e1a-b817-c75e3ba5c287
-
Google News Preferred Icon

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் அவர்களது ரசிகர்களைப் பொறுத்த வரை தீபாவளிதான். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு அவரது படம் வெளியாகிறது என்றால் ரசிகர் களுக்கு அது இரட்டைத் தீபாவளி. விஜய் நடித்துள்ள 'சர்கார்' வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளி யாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி யுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை வெளி யிடுகின்றனர்.

தெலுங்குப் பதிப்பின் விநியோக உரிமை பல கோடி ரூபாய்க்கு விலை போயிருப்பதாகத் தகவல். தமிழகத்தில் முந்தைய விஜய் படங்களைவிட இப் படத்திற்கு சுமார் ரூ.20 கோடி அதிகம் கொடுத்து விநியோகஸ்தர்கள் வெளி யிட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் எனும் பெருமையும் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலும் கூட அதிக திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சர்கார்' வெளியீடு காண உள்ளது. கோலிவுட் மூவிஸ் எனும் நிறுவனம் இப்படத்துக்கான அமெரிக்க வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள் படத்துக்கு இப்போதே முன்பதிவு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். படம் வெளியாகும் தினத்தன்று திரையரங்குகளுக்கு மேளதாளத்துடன் சென்று கொண்டாடப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் நடித் துள்ள படங்களில் மிக அதிக வசூல் கண்ட படமாக 'சர்கார்' அமையும் என்று கோடம்பாக்கப் புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.

'சர்கார்' படத்தில் இடம்பெறும் காட்சியில் விஜய், கீர்த்தி சுரேஷ்.