‌ஷில்பா: சினிமா துறை மோசமானதல்ல

‌ஷில்பா: சினிமா துறை மோசமானதல்ல

1 mins read
243dde70-94a0-47ce-947b-51fd9c284a6d
-
Google News Preferred Icon

ஒருசிலர் கூறுவது போல் சினிமாத் துறை அவ்வளவு மோசமானது அல்ல என்கிறார் நடிகை ‌ஷில்பா ‌ஷிண்டே. மேலும் இத்துறையில் இருக்கும் அனைவரையுமே மோசமானவர்கள் என சித்திரிப்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரையுலகில் பணியாற்றும் பெண் கலைஞர்கள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளைத் தற்போது வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திரையுலகில் பாலியல் பலாத்காரங்கள் நடக்க வாய்ப்பே இல்லை என்று ‌ஷில்பா ‌ஷிண்டே கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

"திரையுலகில் பலாத்காரம் எனும் பேச்சுக்கே இடமில்லை. இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் விலகிவிட வேண்டும். அதைவிடுத்துப் புகார் தெரிவிப்பது முறையல்ல," என்கிறார் ‌ஷில்பா ‌ஷிண்டே. ஒருசிலர் சினிமாத் துறையின் பெயரைக் கெடுப்பது போல் பேசிக்கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.