தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடத்தல், மருத்துவமனை யிலிருந்து குழந்தை கடத்தல், வீட்டுக்குள் நுழைந்து குழந்தை கடத்தல் எனப் பல்வேறு சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறுகிறது. அதற்கான ஆதாரங்களும் சிசிடிவி புகைப்படக் கருவிகளில் பதிவாகிறது. இந்தச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது 'அவதார வேட்டை'. இதுபற்றி தயாரிப்பாளரும் இயக்குநருமான ஸ்டார் குஞ்சுமோன் கூறியபோது, "ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை அறிவதற்காக வித்தியாசமான குறியீடுகளைக் கையாண்டு கடத்துகிறார் கள். அந்தக் கும்பலை நாயகன் எப்படித் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து இதன் கதை உருவாகியிருக்கிறது. வி.ஆர்.விநாயக் நாயகன். மீரா நாயர் நாயகி. ராதாரவி, சீனிவாசன், ரியாஸ்கான், சோனா, மகாநதி சங்கர் நடிக்கின்றனர். ஏ.காசி விஷ்வா ஒளிப்பதிவு. மைக்கேல் இசை. பொள்ளாச்சி, ஊட்டி, உடுமலைப் பேட்டை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது," என்று இயக்குநர் கூறியுள்ளார். படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்

