லாரன்ஸ் படத்தில் ஸ்ரீரெட்டி ‘மீடூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல்

புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புத் தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப் பாளர்கள் உட்பட பலரும் தனக்கு பாலியல் தொந்தரவுகள் தந்து தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புகார் கூறினார். ராகவா லாரன்ஸ் மீதும் பாலியல் புகார் கூறிவந்த ஸ்ரீ ரெட்டிக்கு, தற்போது அடுத்த படத்தில் நடிப்பதற்கு லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்து, முன்பணமும் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். தெலுங்குப் பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ்த் திரையுல கினர் மீதும் அவர் பாலியல் புகார் களைக் கூறியிருந்தார்.

இதில் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எனக்குப் படவாய்ப்பு கொடுத் திருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறி யிருக்கிறார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், "எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். நான் லாரன்சை நேரில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். அவருடன் குழந்தை களும் இருந்தார்கள். அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார் கள். அதன்பின் அடுத்த படத்தில் வாய்ப்புத் தருவதாகக் கூறி முன் பணம் கொடுத்தார். இந்தப் பணத்தை சூறாவளியால் பாதிக் கப்பட்ட ஸ்ரீகாகுலம் பகுதி மக்களுக்குக் கொடுக்க உள்ளேன்," என்று பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து லாரன்ஸ் கூறும்போது, ''ஸ்ரீரெட்டி நடிக்க வாய்ப்பு தேடி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். என்னைப் பற்றி அவர் சொன்னதற்கு ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டேன். ஸ்ரீரெட்டிக்கு யாரும் இதுவரை வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவரது நடிப்புத் திறமையை நேரில் பார்த்து எனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்து இருக்கிறேன்'' என்றார். ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப் பளித்துள்ள லாரன்சுக்குப் பெரிய மனது என்று சமூக வலைத் தளங்களில் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!