தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'96' ரூ.25 கோடி வசூல்; 'சீதக்காதி' யு சான்றிதழ்

1 mins read
3c209c40-f59c-492f-b95c-c4a1117f1f2a
-

அறிமுக இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் '96'. உணர்வுபூர்வமான காதல் கதையாக இருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது தீபாவளி கலெக்ஷனில் திரிஷா (படம்) அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதாரும் கடைகளுக்கு வந்து விட்டது. இப்படி பலரின் மனதை கொள்ளை கொண்ட '96' படம், இந்த இரண்டு வாரங்களில் 25 கோடி ரூபாயை வசூலித் துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்துள்ள இந்தப் படம் தமிழ்ச் சினிமாவின் மறக்கமுடியாத காதல் படங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையே 'சீதக்காதி' படத்திற்கு தணிக்கைக் குழுவின் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 'ஆரஞ்சு மிட்டாய்' படத் திற்கு பிறகு விஜய் சேதுபதி முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்துள்ள படம் 'சீதக் காதி'. விஜய் சேதுபதிக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.