ஐந்து கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த 'வாயாடி பெத்த புள்ள' பாடல்

ஐந்து கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த 'வாயாடி பெத்த புள்ள' பாடல்

1 mins read
95ddc682-0b70-4a75-9085-6460ab02e99e
-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத் தில் உருவாகி இருக்கும் 'கனா' படத்தில் இடம்பெற்றுள்ள 'வாயாடி பெத்த புள்ள' பாடலை சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த் திகேயன் தயாரிப்பாளராகவும் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமாகி யிருக்கும் படம் 'கனா'.

மகளிர் கிரிக்கெட்டை மையப் படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக் கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் இணையத்தில் கண்டுகளித் துள்ளனர்.

இதுகுறித்து சிவகார்த்தி கேயன் கூறும்போது, "தந்தை, மகள் உறவையும் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்தப் பாடல் இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ், பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. அதோடு என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுவதும் நினைத்துப் பார்க்க ஓர் அரிய வாய்ப்பை வழங்கிய இந்தப் பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன்" என்றார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.