சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'கண்ணே கலைமானே'. வசுந்த்ரா காஷ்யப், வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் உதயநிதி மிகவும் உணர்வுப் பூர்வமான வேடத்தை ஏற்றுள்ளாராம். வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருப்பது முக்கிய சிறப்பம்சம். "இது காதலுடன் கூடிய குடும்பக் கதை. எனவே இளையர்கள், பெரியவர்கள் என அனைவரும் பார்த்து ரசிக்க முடியும். இப்படி யொரு வாய்ப்புக்காக சீனு ராமசாமி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்," என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
காதலுடன் கூடிய குடும்பப்படமாக உருவாகிறது 'கண்ணே கலைமானே'
1 mins read
-

