எதிர்பார்த்த வேடம் கிடைத்துள்ளது - ரெஜினா

எதிர்பார்த்த வேடம் கிடைத்துள்ளது - ரெஜினா

1 mins read
74a8193a-60d2-41f9-8a97-13d58a4e071c
-

'நெஞ்சம் மறப்பதில்லை' படம் எப்போது வெளியாகும் என்பதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் படம் குறித்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விநியோகிப்பாளர்கள் தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் தாம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கதாபாத்திரம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி ரெஜினா கசாண்ட்ரா. அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தாராம். "இந்தப் படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டபோது உள்ளூர தயக்கமாக இருந்தது.

காரணம், அவர் ரொம்பக் கோபக்காரர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பலரும் இதைச் சொல்லிப் பயமுறுத்தவும் செய்தனர். "ஆனால் நேரில் சந்தித்தபோது நான் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தார். மிக அன்பாகவும் அமைதியாகவும், அதே சமயம் இயல்பாகவும் பேசிப் பழகினார். அவரது அறிவுரைப்படியே படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எனது நடிப்பை மெருகேற்றிக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். "இந்தப் படம் எப்போது வெளியானாலும் சரி.. நிச்சயம் வெற்றி பெறும். படத்திற்காக அளித்த பங்களிப்புக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். படம் விரைவில் வெளியாக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது," என்கிறார் ரெஜினா.