ஆபாச வசனங்கள்: 'வடசென்னை' இயக்குநர் மீது புகார்

ஆபாச வசனங்கள்: 'வடசென்னை' இயக்குநர் மீது புகார்

1 mins read
ec3de8a3-4699-43f4-9b48-33e2f165c5eb
-

'வடசென்னை' படத்தில் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது இச்சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதைப் புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கத்துடன் இயக்குநர் வெற்றிமாறனால் இப்படத்தின் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

"பொது இடத்தில் ஆபாச வார்த்தைகள் பேசுவது, பாடுவது ஆகியவை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே தவறு என்று தெரிந்தே வசனங்கள் எழுதிய வெற்றிமாறன் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 'வடசென்னை' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இது ரவுடிகளுக்கு இடையே நடைபெறும் மோதல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும்.