நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது அர்ஜுன் மானநஷ்ட வழக்கு

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது அர்ஜுன் மானநஷ்ட வழக்கு

2 mins read
46bbd601-7774-42ab-8b1a-3718b16d96e4
-

பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டியுள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் எந்த விதமான கிசுகிசுக்களிலும் சிக் காத நடிகர் என நற்பெயர் எடுத்தவர் அர்ஜுன். தேசப்பற்றை வலியுறுத்தி பல்வேறு திரைப்படங்களை எடுத்தவர். இந்நிலையில் அர்ஜுன் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

இவர் 'நிபுணன்' படத்தில் அர்ஜுனுடன் நடித்தவர். இப்படத் தின் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தன்னை இறுக்கமாகக் கட்டி அணைத்துப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது ஸ்ருதியின் குற்றச்சாட்டு. இது தமக்கு அதிர்ச்சி அளித் திருப்பதாகக் கூறுகிறார் அர்ஜுன். இதுவரை சுமார் 70 கதாநாயகி களுடன் தாம் நடித்திருப்பதாகவும் யாரும் தம்மை நோக்கி கைநீட்டி எத்தகைய புகாரும் தெரிவித்த தில்லை என்றும் அவர் தெரி வித்துள்ளார். இத்தகைய புகாரை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

"நிபுணன்' படத்தில் ஸ்ருதி மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறி னார். இயக்குநர் விருப்பப்படியே அவருடன் இணைந்து நடித்தேன். அதை மீறி ஏதும் செய்யவில்லை. "இந்தப் புகார் குறித்து எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எப்படி விளக்கமளிப்பது எனும் கவலையில் மூழ்கியுள்ளேன். என் மீது தவறான புகாரைக் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்தப் புகாரின் பின்னணியில் யாரோ சிலர் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது," என்று அர்ஜுன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி எழுப்பி யுள்ள பாலியல் புகார் தொடர்பில் அர்ஜுன் மன்னிப்புக் கேட்கவேண் டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இவ்வாறு செய்வது அர்ஜுனின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். "அர்ஜுன் மூத்த நடிகர் என் பதை மறந்துவிடக்கூடாது. அதேசமயம் புகார் எழுப்பியுள்ள அந்தப் பெண் இத்தனை நாட்களாகத் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தன் மீதான பாலியல் புகாரை அர்ஜுன் புறம் தள்ளினாலும் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டி யது அவசியம்," என பிரகாஷ் ராஜ் மேலும் தெரிவித்துள்ளார். "பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது 'மீ டூ' இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண் கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்," என்றும் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இதற்கிடையே தனது தந்தை பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவர் என்றும் ஸ்ருதி கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.