நான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் - சஞ்சனா கல்ராணி

நான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் - சஞ்சனா கல்ராணி

2 mins read
2873a523-e172-478a-a6b4-c2270a18ec1d
-

நடிக்க வந்த புதிதில் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் நடித்த முதல் தெலுங்குப் படத் தின் படப்பிடிப்பு நடந்தபோது பாலியல் தொல்லைகளுக்கும் ஆளானாராம். தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ள இளம் நாயகி நிக்கி கல்ராணி வேறு யாருமல்ல, சஞ்சனாவின் சகோதரி. 16 வயதி லேயே நடிக்க வந்துவிட்டாராம் சஞ்சனா. பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சினிமா வாய்ப்புத் தேடி வந்திருக்கிறது.

சிறு வயது முதலே திரைப்பட நடி கையாக வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருந்தபடியால் தேடிவந்த வாய்ப்பை உடனே ஏ ற் று க் கொ ண் டா ராம். " கன்னடத்தில் உருவான ' கண்டாஎண்டதி' யின் இயக்குநர் படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். பிறகு இந்திப் படத்தைப் பார்க்கு மாறு கூறினார். "அதில் ஏராளமான ஆபாசக் காட்சிகள் இருந் தன. அதைத்தான் கன்னடத்தில் மறுபதிப்பு செய்ய விரும்புவதாக இயக்குநர் கூறிய போது எனக்குத் தயக்கமாக இருந்தது.

"ஆபாசக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அப்படத்தில் நடிக்க விரும்ப வில்லை என்று கூறிவிட்டேன். ஆனால், கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என இயக்குநர் உறுதியளித்தார். இதனால் ஒரே ஒரு முத்தக் காட்சியில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்கிறார் சஞ்சனா. இந்நிலையில் படப்பிடிப்புக்காக அந்தக் கன்னடப் படக்குழுவினர் பேங்காக் சென்றுள்ளனர்.

துணைக்குத் தன் தாயாரையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளார் சஞ்சனா. ஆனால், பேங்காக்கில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சஞ்சனாவின் தாயார் அழைத்துச் செல்லப்படவில்லை. அவரைத் தங்கும் விடுதி அறையிலேயே இருக்கச் சொல்லிவிட்டனராம். இந்நிலையில் அப்படத்தில் மேலும் பல முத்தக் காட்சிகளைச் சேர்த்துள்ளார் இயக்குநர். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் சஞ்சனாவை இயக்குநர் தரப்பு மிகவும் கவர்ச்சியாக நடிக்க வைத்ததாம்.

"இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐம்பது முறை முத்தக்காட்சிகளில் நடிக்க வைத்தனர். மேலும் எனது உடல் அங்கங்களையும் வேண்டுமென்றே படு கவர்ச்சியாகப் படமாக்கினர். "இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அப்படக் குழுவைச் சேர்ந்த சிலர் திரையுலகில் என்னால் நீடிக்க இயலாது என்றும் மிரட்டினர். இதனால் வேறுவழியின்றி படத்தில் நடித்து முடித்தேன்.

இந்த மோசமான அனுபவத்திலிருந்து மீண்டு வர இவருக்கு இரண்டு மாத காலம் ஆயிற்றாம். தனது மகளின் நிலை கண்டு சஞ்சனாவின் தாயாரும் மிகுந்த வருத்தத்தில் மூழ்கி இருந் துள்ளார்.