ஜீவா, ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'கொரில்லா'. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் டான் சாண்டி. "இது முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சதீஷ் கூட்டணியில் நகைச்சுவை காட்சிகள் தூக்கலாக இருக்கும். ஒரு குரங்கை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்," என்கிறார் டான் சாண்டி. இந்தப் படம் நிச்சயம் பெரும் வெற்றியைப் பெறும் என நாயகன் ஜீவாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'கொரில்லா'
1 mins read
-

