டிரைடண்ட் வசம் சென்ற 'சீதக்காதி'

டிரைடண்ட் வசம் சென்ற 'சீதக்காதி'

1 mins read
7a133dc6-11ad-403b-8f93-4856d1920c18
-
Google News Preferred Icon

'சீதக்காதி' படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் வாங்கியிருக்கிறார். பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இது. நாயகன் விஜய் சேதுபதி. இதில் எண்பது வயது முதியவர் வேடத்தில் நடித்துள்ளார். சேதுபதி நடிப்பில் இந்தாண்டு வெளியான 'செக்கச்சிவந்த வானம்', '96' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து 'சீதக்காதி', 'சூப்பர் டீலக்ஸ்', 'சயீரா நரசிம்ம ரெட்டி' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இவற்றுள் 'சீதக்காதி'யில் வயதான நாடகக் கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார் சேதுபதி. நாடகக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது டிரைடண்ட் நிறுவனம்.