ஸ்ரேயா: நல்ல பெயர் எடுப்பதே இலக்கு

ஸ்ரேயா: நல்ல பெயர் எடுப்பதே இலக்கு

2 mins read
a6c01d44-3a30-42c7-8655-a5d6fe15f514
-

ஆணாதிக்கம் நிறைந்த திரையுல கில் அண்மைக்காலமாக பெண்க ளின் பங்களிப்பும் அதிகரித்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ஸ்ரேயா. தனது காதலரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் திரை யுலகை விட்டு விலகாமல் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'எ லிட்டில் பேர்டு' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. எந்த விஷயம் குறித்துக் கேட் டாலும் தனக்குத் தெரிந்தவற்றைத் தயங்காமல் சொல்லக்கூடிய ஸ்ரேயா, திருமண வாழ்க்கை குறித்து மட்டும் பேச விரும்புவது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் கேட்காதீர்கள் எனக் கறாராகக் கூறிவிடுகிறார்.

"திரைத்துறை ஆணாதிக்கம் நிறைந்த துறை என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், அப்பேர்பட்ட துறையில் பெண்கள் இயக்குநர்கள் ஆவதைப் பார்ப்பதற்குப் பெருமையாக உள்ளது. "கேமராவுக்கு முன்பு மட்டுமல்ல, அதன் பின்னணியிலும் கூட நிறைய பெண்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்போதுதான் திரைத்துறையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்," என்கிறார் ஸ்ரேயா.

"நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மூலம் நல்லபல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இனி பணம் என்பது இரண்டாம் பட்சம்தான். நல்ல படங்களில் எனது பங்களிப்பு இருந்தால் மட்டுமே, என்னைப் போன்ற ஒரு நடிகை இருந்ததாக ரசிகர்கள் பல ஆண்டுகள் கழித்து நினைவில் வைத்து இருப்பர். "அத்தகைய நிலையை அடைய வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்," என்று சொல்லும் ஸ்ரேயா, இன்றளவும் வெளியே செல்லும்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வது உற்சாகம் அளிப்ப தாகக் குறிப்பிடுகிறார்.