'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' என்ற பெயரில் புதுப்படம் ஒன்று தயாராகிறது. கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவு பொறுப்பையும் ஏற்றுள் ளார் இதன் இயக்குநர் நவீன் மணிகண்டன். "தலைப்பு வித்தியாசமாக இருப்ப தால் ரசிகர்கள் மனதில் உடனே பதிந்துவிட்டது. 'வின்னர்' படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப் பகுதியில் வடிவேலு பேசும் வசனம் இது. இதை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.
"எனவேதான் இதைத் தலைப் பாக வைத்தோம். இது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம். மக்கள் மத்தியில் பரிட்சயமான வார்த்தை களைத் தலைப்பாக வைத்தால் எளி தில் கவரும் என்று நினைத்தோம்," என்கிறார் நவீன் மணிகண்டன். படம் பார்க்க திரையரங்குக்கு வருபவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார் கள் என்ற உத்தரவாதத்தை அளிப் பவர், படம் முழுவதும் பல நகைச் சுவை நடிகர்கள் வந்து போவார்கள் என்கிறார்.

