'பில்லா பாண்டி'

1 mins read
4b0aeb13-638f-4e35-8f0d-8682700ad10b
-

வரும் 6ஆம் தேதி தீபாவளித் திருநாள் அன்று வெளியாகிறது 'பில்லா பாண்டி'. ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ 9 என்ற நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தற்போது படத்தை தயாரித்த ஜேகே பிலிம் நிறுவனமே உலகம் முழுவதும் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். இந்துஜா, சாந்தினி என இரு நாயகிகள் உள்ளனர். தயாரிப்பாளர் கே.சி. பிரபாத் முக்கிய கதாபாத்திரத்திலும் சூரி, விதார்த் இருவரும் கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளனர்.