சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது கன்னடத்தில் நடித்து வரும் படத்துக்காக ஆபத்து நிறைந்த சண்டைக் காட்சியில் 'டூப்' போடாமல் நடித்து பாராட்டுகளை அள்ளி இருக்கிறார். தமிழ், தெலுங் கிலும் இப்படம் வெளியாகிறது. இதில் அதிரடி நாயகியாக நடித்துள்ளார் தன்ஷிகா. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றது.
அப்போது ஒரு மாடி வீட்டிலிருந்து ஜன்னல் வழியே அவர் கீழே குதிப்பது போன்ற காட்சியைப் படமாக்கினர். இதற்காக துணை நடிகை ஒருவரை 'டூப்'பாக நடிக்க வைக்க அழைத்து வந்திருந்தனராம். ஆனால் காட்சியைப் படமாக்கியபோது அந்த துணை நடிகையின் முகத்தை மறைக்கமுடியாமல் போனதாம். இதையடுத்து படப்பிடிப்பு அரங்கில் இருந்த தன்ஷிகா, தாமே அக்காட்சியில் நடிப்பதாகக் கூறி, சொன்னபடியே செய்திருக்கிறார். இதற்கு அவரைப் படக்குழுவினர் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

