அதிக சம்பளம் பெறும் கதாநாயகி

அதிக சம்பளம் பெறும் கதாநாயகி

1 mins read
5b5fcabd-cb4e-46a9-b4c8-77e72de50052
-
Google News Preferred Icon

நயன்தாராவின் சம்பளம் தற்போது 5 கோடி ரூபாயாக உள்ளது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்கும் பட்சத்தில் இது பத்து கோடியாகக் கூட உயரக்கூடும். அது கிடக்கட்டும். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யாரெனத் தெரியுமா? இந்தி நடிகை கங்கனா ரணா வத். அண்மைய நிலவரப்படி இவரது சம்பளம் ரூ.14 கோடியாம். இவரது நடிப்பில் உருவான 'பத்மாவத்' படம் ரூ.215 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ரூ.580 கோடி வசூல் கண்டுள்ளது.

இப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் கடந்தாண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த கங்கனா, இப்போது முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்திய அளவில் வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிய சம்பளத்தைப் பெற்றதில்லை என்று கூறப்படுகிறது. 2018-10-30 06:10:00 +0800