நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் கூறியிருந்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன், இப்போது அவர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்த புதுப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீடூவில் பதிவிட்டு பாலியல் வழக்கை இழுத்துவிட்டிருக் கும் ஸ்ருதியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் அர்ஜுன். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்ருதி நீதிமன்றப் படியேறி இறங்கிக்கொண்டிருந்தால் படப்பிடிப்பு பாதிக்கும் என்று கூறி அவரைப் படத்தில் இருந்து புதுப் படத்தின் இயக்குநர் நீக்கியுள்ளார். தமிழ், கன்னடப் பட உலகில் பிரபல கதாநாயகனாக விளங்கும் அர்ஜுன் படப்பிடிப்பு ஒத்திகையின்போது தன்னை இறுக்கமாகக் கட்டி அணைத் தார் என்றும் உல்லாச விடுதிக்கு அழைத்தார் என்றும் ஸ்ருதி போலி சில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதன் காரணமாக அர்ஜுன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. "தாரி தப்சித்டான் தேவ்ரு' என்ற கன்னடப் படத்தில் நடிக்க ஸ்ருதியை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்தோம். ஸ்ருதி வழக்கு தொடர்பாக அடிக்கடி நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியது இருக்கும். எனவே அவரை படத்தில் தொடர்ந்து எங்களால் நடிக்கவைக்க முடியாது. அதனால் வேறு நாயகியைத் தேடுகிறோம். 'மீடூ' விவகாரத்தை 4 சுவர்களுக்குள் முடிந்திருக்கவேண் டும். அது வீதிக்கு வந்து நாலு பேர் நாலுவிதமாகப் பேசும்படி மோசமாகி விட்டது," என்று இப்பட இயக்குநர் பி.எஸ். லிங்கதேவ்ரு கூறியுள்ளார்.

