அன்று வெளியீடாக உள்ள 'சர்கார்' படத்தின் கதை என்னு டைய கதை, அந்தக் கதையைத் திருடி 'சர்கார்' படத்தை இயக்கு நர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத் துள்ளார் என்று வருண் ராஜேந் திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தன்மீது சுமத்தப்பட்ட கதை திருட்டு குற்றச்சாட்டை கடந்த சில நாட்களாக மறுத்து வந்த முருகதாஸ், இப்போது 'சர்கார்' படக்கதை தன்னுடையது அல்ல என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
நீதிபதி சுந்தர் முன்பு மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் 'சர்கார்' படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் எனவும் 'சர்கார்' படத் துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரைப் போட்டு நன்றி தெரி விக்கப்படும் என்றும் நீதிமன்றத் தில் ஏ.ஆர். முருகதாஸ் உறுதி அளித்துள்ளார். சமரசத்திற்கு வருண் ரூ.30 லட்சம் கேட்ட நிலையில் குறிப் பிட்ட அளவு பணம் தரப்படும் என ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

