தலைவர் பதவியைத் துறந்த பாக்யராஜ் வேதனை

தலைவர் பதவியைத் துறந்த பாக்யராஜ் வேதனை

2 mins read
1fd153e7-3ec2-46cd-93bf-f551fdc57ceb
-

'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது எனவும் 'செங்கோல்' படத்துக்காகத் தான் பதிவு செய்திருந்த கதையைத்தான் இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளார் என்றும் இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார். நீதிமன்றம் செல்வதற்கு முன் கதை தொடர்பாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் தொடுத்திருந்தார்.

இந்தப் புகாரை ஆய்வு செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறுகையில், "சர்கார் = செங்கோல் இரு கதைகளின் மையக் கருவும் ஒன்றுதான். அதனால் நான் முருகதாஸைத் தொடர்புகொண்டு வருணுக்கு நீதி கிடைக்க கெஞ்சியும் அவர் உடன்படாததால்தான் நான் கதையை வெளியே சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டேன். இருந்தாலும் நான் செய்தது தவறு என்று எண்ணித்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பும் கேட்டேன். "தொடர்ந்து இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நீதிமன்றத் திலும் கருத்துத் தெரிவித்தேன்.

இதற் கிடையில், நீதிமன்றத்தில் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது. 'சர்கார்' படத்தில் வருண் ராஜேந்திரன் பெயரும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமரசத்தால் 'சர்கார்' திட்டமிட்டபடி வெளியாகவுள்ளது. 'சர்கார்' கதை பிரச்சினையில் சம்பந்தப்பட்ட உறுப்பினர் புகாரில் உண்மை இருந்தது எனத் தெரிந்ததால்தான் நடவடிக்கை எடுத்தேன். இதில் நான் கதையை வெளியே சொல்லிவிட்டதால் விஜய் ரசிகர்கள் என் மேல் கோபப்பட்டு என்னையும் என் மகனையும் டுவிட்டரில் ஏக வசனத்தில் பேசி பல தரமற்ற பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். "வீட்டில் என் மகனே எனக்கு எதிராகப் பேசும் நிலை உருவாகிவிட்டது.

விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் எனக்கு நண்பர்கள் தான். நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தினால் தேவையில்லாத அசௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அதனால் நான் இந்த தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்," எனக் கூறி பதவி விலகல் செய்துள்ளார் கே.பாக்யராஜ். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு, "போட்டி இல்லாமல் உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு நான் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டேன். அப்போது நான் நேர்மையாகச் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். 'சர்கார்' படம் சம்பந்தமாக சங்கத்துக்கு வந்த புகாரைப் பரிசீலித்துப் பார்த்தபோது வருணிடம் உண்மை இருப்பதை தெரிந்துகொண்டேன்.