வரலட்சுமியின் வழி தனி வழி

1 mins read
9e9f371c-677e-4917-b1b0-ddbe57b5c331
-

சிலம்பரசனுடன் 'போடா போடி' படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் வரலட்சுமி சரத்குமார். பன்முகத் திறமை கொண்ட இவர் மற்ற நடிகைகளைப்போல இல்லாமல் சினிமா துறையைப் பொருத்தவரை 'என் வழி தனி வழி' என்று ஒரு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான 'சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்து மிரட்டிய வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக 'சர்கார்' படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. 'சர்கார்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது "இன்னும் 5 ஆண்டுகளில் அரசியலுக்கு வருவேன்.

எனது தந்தை அவரது கட்சியில் சேரும்படி ஏற்கெனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் என் தந்தையின் கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்தக் கட்சியில் சேருவேன் என்பதைப் பிறகு தெரிவிப்பேன்," என்றார். வரலட்சுமி கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கமாட்டார். மேலும், தான் ஒரு முன்னணி நடிகராக இருந்த நடிகர் சரத்குமாரின் பெண் என்று கூறி பெருமை பேசமாட்டார். வில்லி கதாபாத்திரம் கொடுத்தால்கூட முகம் சுளிக்காமல் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவார்.