சன் தொலைக்காட்சிக்கு திரிஷா வேண்டுகோள்

சன் தொலைக்காட்சிக்கு திரிஷா வேண்டுகோள்

1 mins read
8a77fd63-b105-47f9-925e-469596315863
-
Google News Preferred Icon

தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் திரிஷா, விஜய் சேதுபதி நடித்திருந்த '96' படத்தை ஒளிபரப்பக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திரிஷா. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் மிகப் பெரிய வெற்றிப்படமானது. '96' படம் ஓடும் திரையரங்குகளில் 80 விழுக்காடு இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. இந்நிலையில் '96' படம் சன் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று மாலை ஒளிபரப்பப்படுகிறது என்று விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்து திரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். படம் வெளியாகி 5 வாரங்கள் ஆகின்றன. இந்நிலையில் '96' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சரியில்லை என்று '96' படக்குழு நினைக்கிறது. அதனால் படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புமாறு சன் தொலைக்காட்சியைக் கேட்டுக்கொள்கிறோம். '96' படத்தைத் தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது என்ற திரிஷாவின் கோரிக்கைக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது.