'2.0' முன்னோட்டக் காட்சி

'2.0' முன்னோட்டக் காட்சி

1 mins read

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக் ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் '2.0'. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இதன் முன்னோட்டக் காட்சி நேற்று காலை சென்னையில் வெளி யானது. இந்த நிகழ்வில் ஷங்கர், ரஜினிகாந்த், அக் ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் சிறப்பாகப் படத்தின் பாடல்கள் '3டி'யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுவிதமான 'டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம்' அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அந்த இசையைப்பற்றி பத்திரிகை யாளர்களுக்கு விளக்கப்பட்டது.