சாதிக்கு எதிராகக் கிளம்பிய இயக்குநர்

சாதிக்கு எதிராகக் கிளம்பிய இயக்குநர்

1 mins read
65bdee54-e240-46fc-b721-0838bfb65f01
-

சாதித் திமிருக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டுமென இயக்குநர் பா. ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். சமூகத்திலிருந்து துடைத்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய சாதி எனும் கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம் என்றும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே, விழித்துக்கொள்வோம். "இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிகள்தான் இந்த நூற்றாண்டின் பெரும் இழிவு. எனவே சாதிகளை ஒழித்திட வேண்டும்," என்று பா. ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.