‘பேய்க் கதைகள் பிடிக்கும்’

குடும்பத் தகராறு, சிக்கல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட பிறகு தன் போக்கில் நல்ல கதை களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் அஞ்சலி. தற்போது தமிழைவிட தெலுங்கில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதனால் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. 'கீதாஞ்சலி', 'சித்ரங்கதா' என தெலுங்கில் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனவாம். இவை இரண் டுமே பேய்க் கதைகளை மையமாக வைத்து உருவானவை. தெலுங்கு ரசிகர்களைப் போலவே கோடம்பாக்கத்திலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் 'லிசா' என்று தலைப்பிடப் பட்டுள்ள தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.

இது முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் உருவாகும் படமாம். 8 கேமராக்களின் உதவி யோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் சில நவீன தொழில்நுட்பங்களையும் இப்படத் துக்காகப் பயன்படுத்துகின்றனர். 'லிசா' குறித்துப் பேசினாலே அஞ்சலியின் முகத்தில் திகிலும் அச்சமும் படர்வதைக் கவனிக்க முடிகிறது. அதேசமயம் ஒருவித உற்சாகத்துடனும் பேசுகிறார். "இப்போது ரசிகர்களுக்குப் பேய்ப்படங்கள் மீதுதான் அதிக மோகமுள்ளது. அதனால்தான் தெலுங்கில் அடுத்தடுத்து நான் நடித்த இரு பேய்ப்படங்களும் பெரிய அளவில் வெற்றி கண்டன. 'சித்ரங்கதா' படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. 'பாகமதி'யின் இயக்குநர் அசோக்குமார் இயக்கியிருந்தார்.

இதன் பிறகுதான் ரசிகர்கள் திகில், மர்மங்கள் கொண்ட படங்களை விரும்புவதை நன்கு உணர்ந்தேன்," என்று சொல்லும் அஞ்சலிக்கும் தொடர்ந்து பேய்ப் படங்களில் நடிக்க விருப்பமாம். இவரது விருப்பத்துக்கேற்பவே தேடிவரும் பல இயக்குநர்கள் பேய்க்கதைகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். தமிழைப் பொறுத்த வரை அஞ்சலி நடித்த முதல் திகில் படம் 'பலூன்'. இதையடுத்து 'லிசா'வில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தெலுங்கு 'கீதாஞ்சலி' யின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். "திகில், மர்மப் படங்களில் நடிக்கும்போது நமது நடிப்பு நிச்சயம் மெருகேறும். அந்தப் படங்கள் வெளியாகும்போது திரையில் நான் எப்படி காட்சியளிக்கிறேன் என்பதைக் காண எனக்கே ஆர்வமாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!