யாருடனும் தனிப்பட்ட மோதலில் ஈடுபட தமது ரசிகர்களை அனுமதித்ததில்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அன்பு மட்டுமே அனைத்துக்குமான வழி என்றும், ரசிகர்கள் தன் மீது வெளிப்படுத்தும் அன்பை வெகுவாக மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் இப்படத்துக்குப் புதுச் சிக்கல் முளைத்துள்ளது. "என்னை நம்பி வந்த ஒருவர் கஷ்டத் தில் இருக்கிறார் என்று தெரியவந்தால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் உதவி செய்வேன்.
இந்த விஷயத்தில் நான் அவ்வாறு செயல்படவில்லை என்றால், அக்குறிப்பிட்ட நபர் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்? எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை மீறி 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படம் வெளியாகும்," என்று கூறியுள்ளார் சிம்பு. மேலும் தமக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப் படுவது உண்மையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

