கோடம்பாக்கத்தில் கதை தொடர் பாக சர்ச்சை எழுவது வாடிக்கை யான விஷயமாகிவிட்டது. அட்லி, முருகதாஸ் ஆகியோரைத் தொடர்ந்து இயக்குநர் கணேசா வும் இப்படியொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அண் மையில் வெளியான படம் 'திமிரு புடிச்சவன்'. விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ள படம் இது. இதன் கதைக்கரு தனக்குச் சொந்தமா னது என்று புகார் எழுப்பி உள்ளார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சென்ற வருடம் நான் இணையத்தளம் ஒன்றில் எழுதிய தொடர் 'ஒன் + ஒன் = ஜீரோ'. பதினெட்டு வயதுக்குக் குறை வான சிறுவர்களை மூளைச் சலவை செய்து, தமக்கு வேண்டா தவர்களைக் கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பிக் கின்றனர் என்பதுதான் இக் கதையின் அடிப்படைக் கரு. "இதை அப்படியே காப்பியடித்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப் போது திருந்துவார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
'திமிரு புடிச்சவன்' படத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ்.

