சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சின்மயி

சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சின்மயி

1 mins read
6517b765-2e43-404e-95a3-ee174d5d1585
-

திரைப் படங்களுக்காகப் பின்னணி குரல் கொடுப்போர் (டப்பிங்) சங்கத்தில் இருந்து தம்மை நீக்கியுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். அண்மையில் இச்சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவி மீது இரண்டு பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக சின்மயி குரல் கொடுத்திருந்தார். இதன் காரணமாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தமக்குப் பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாண்டுகளாக சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்தவில்லை என்று கூறி தன்னை நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சின்மயி. "இதுகுறித்து எனக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை. முன்பே தெரிவித்திருந்தால் சந்தா தொகையைச் செலுத்தியிருக்க முடியும். சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதால் அண்மையில் வெளியான '96' படம்தான் நான் பின்னணிக் குரல் கொடுத்த கடைசிப் படமாக இருக்கும்," என்று சின்மயி தெரிவித்துள்ளார்.