அதிர்ச்சியில் ஓவியாவின் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ஓவியாவின் ரசிகர்கள்

1 mins read
dcd7f334-7212-40ed-bfbb-4928d925ed6e
-

நடிகை ஓவியா முதன் முறையாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். 'பிக்பாஸ்' மூலம் பிரபலமானார் ஓவியா. இனி இவர் நடிக்கும் படங்களைக் காணலாம் என்று காத்திருந்த ஓவியா 'ஆர்மி'க்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்கவேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் தவமாய் தவம் கிடக்க, ஓவியா தனக்குப் பிடித்த கதையில்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டார்.

ஆனால் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார். ஓவியாவின் நடிப்பில் 'காஞ்சனா 3' திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் தொலைக்காட்சியிலும் தலையைக்காட்ட முடிவெடுத்து இருக்கிறார். 'கலர்ஸ்' தொலைக்காட்சி ஒளிபரப்பாக இருக்கும் புதிய நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக இல்லாமல், நடுவராக களமிறங்குகிறார் ஓவியா.

இம்மாதம் 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள 'டான்ஸ் வெஸ் டான்ஸ்' நடன நிகழ்ச்சியில்தான் இவர் நடுவராக பங்கேற்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நடுவர்களாக நடன இயக்குநர் பிருந்தாவும் நடிகர் நகுலும் இருக்கிறார்கள். பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.