அதோ அந்தப் பறவை போல' படத்தில் நடிக்கும் அமலா பால் காட்டுக்குள் சிக்கித் தவித்த தகவல் தற்பொழுது வெளியாகி யுள்ளது. 'செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ்' சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அதோ அந்தப் பறவை போல'. திகில் படமாக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது,
'அதோ அந்தப் பறவை போல'. அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலா பால் அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்,
வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசி களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி திகில் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

