'மும்மொழி ரசிகர்களைச் சந்திக்கிறேன்'

'மும்மொழி ரசிகர்களைச் சந்திக்கிறேன்'

1 mins read
5020307f-6740-49ce-9dd5-56363f169c1a
-

பல மொழி ரசிகர்களைக் கவர்ந்து விட்டால் கதாநாயகிகளின் பாடு கொண்டாட்டம்தான். ஏனெனில் இவர்கள் நடிக்கும் படம் பல மொழிகளில் வெளியாகும். அந்த வகையில் மலையாள, தமிழ் ரசிகர்களை யதார்த்தமான நடிப்பால் தன்வசம் இழுத்துள்ள சாய்பல்லவி புதுப் படம் ஒன்றில் பகத் பாசிலுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். விவேக் இயக்கும் இந்தப் படம் காதலும் திகிலும் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டதாம். சாய்பல்லவிக்கு தமிழிலும் வரவேற்பு உள்ளதால் இந்தப் படத்தைத் தமிழிலும் வெளியிட கோடம்பாக்கப் புள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

"இந்த முறை நான் நடித்துள்ள படம் தெலுங்கிலும் வெளியாக வாய்ப்புள்ளது. ஒரே படத்தின் மூலம் மூன்று மொழி ரசிகர்களைச் சந்திக்கப்போகிறேன் என்பது இனம்புரியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. "நான் மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்துவதாகக் கூறுவது தவறு. நல்ல கதைகள் அமைந்தால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வேன். தமிழிலும் அப்படிப்பட்ட கதைகள் அமைந்துள்ளன. எனவே மிக விரைவில் அதிக தமிழ்ப் படங்களில் என்னைப் பார்க்க முடியும்," என்கிறார் சாய்பல்லவி. இதற்கிடையே சிம்பு நடிக்கும் புதுப் படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.