நட்சத்திரத் தம்பதியான தீபிகா, ரன்வீரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் உறவினர் கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இளையர்களிடையே சமூக வலைத் தளங்களில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் 'டிரெண்ட்' ஆகியுள்ள நிலையில் திருமண வரவேற்பு புகைப்படங் களும் தற்போது இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டு வரு கின்றன. திருமணத்திற்கு முன்பு இருவரும் ஜோடியாகப் பங்கேற் கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் அணிந்திருக்கும் உடைகள் பலராலும் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில் திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒருவருக் கொருவர் பொருத்தமான உடை களை அணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
நேற்றைய வரவேற்பு நிகழ்ச்சி யில் தம்பதி, அரச குடும்ப தோற்றத்தைத் தரும் உடை, அலங்காரங்களை ஏற்றிருந்தனர். அந்த உடையில் இருவரும் எடுத்துக்கொண்ட முதல் புகைப் படத்தை ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் இருவரும் பதிவேற்றி இருந்தனர். இம்மாதம் 15ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற இவர் களது திருமணத்தில் அவர்க ளுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட் டுமே கலந்துகொண்டனர்.
பிரபல ஆடை வடிவமைப்பாளரான ரோகித் பால் வடிவமைத்த தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு நிற ஷெர்வானி உடையை ரன்வீர் அணிந்திருந்தார். தம்முடைய தாயார் பரிசளித்த தங்க வண்ண பட்டுச் சேலையில் பச்சை வண்ணக் காதணி, கழுத்தணி, முத்துமாலை அணிந்து ஜொலித்தார் தீபிகா படுகோன்.

