ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகும் 'ஆடை' படத்தில் கள இசையை பதிவு செய்யும் புதிய முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. கலைஞர்களின் மொழிப் பிரச்சினை, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் அமலா பால் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி காணப்பட்டார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.
அமலா பாலின் படத்தில் புதிய முயற்சி
1 mins read
-

