விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி இணையத்தில் வெகுவாகப் பரவி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரது கவனத்தையும் விஜய் சேதுபதியின் நடிப்பு ஈர்த் துள்ளது. அதனால் இயக்குநர்கள், நடி கர்கள், நடிகைகள், பாடலாசிரி யர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் அருண்விஜய், கதிர், சசிகுமார், அதர்வா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், இயக்குநர் அட்லீ, பா.ரஞ்சித், நடிகைகள் அஞ்சலி, பார்வதி நாயர், கார்த்திகா நாயர், பாடலாசிரியர் விவேக், காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வயதான தோற்றத்தை ஏற்று நடித்திருந் தாலும் சீதக்காதியில் அவருடைய ஒப்பனையும் பாவனையும் வித்தி யாசமாக பலரையும் கவரும் விதத் தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

