புது நெருக்கடியில் விஷால்

புது நெருக்கடியில் விஷால்

1 mins read
3cd45566-6d67-4488-b300-c77661163c47
-

விஷாலுக்கு இது போதாத நேரம் போல் இருக்கிறது. திரும்பிய திசையில் எல்லாம் யாரேனும் சிலர் எதிர்ப்புக் கொடியுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கங்களில் பொறுப்பு வகிப்பது அவருக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக் கிறது. ஒருதரப்புக்கு மட்டும் சாதகமாக இருக்கிறார், மற்றவர்களைக் கண்டுகொள்வ தில்லை, சரியான நிர்வாகம் இல்லை என்றெல்லாம் இரு சங்கங்களிலும் உள்ள அதிருப்தியாளர்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் ரீதியிலும் விஷா லுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எப்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரோ அப்போதே ஆளும் கட்சியினர் அவரைக் கட்டம் கட்டிவிட்டதாக ஒரு பேச்சிருக்கிறது. இந்நிலையில் இவர் நடிக்கும் புதுப் படத் துக்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. படத்தின் பெயர் 'அயோக்யா'. இந்தப் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை அண்மையில் வெளியிட்டனர். அதில் கையில் மதுப்புட்டி யுடன் காவல்துறை வாகனத்தின் மீது விஷால் உட்கார்ந்திருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

பொறுப்புள்ள நடிகர் இவ்வாறு செய்ய லாமா? இவரைக் கதாநாயகனாக மதித்துப் படம் பார்க்கும் இளையர்கள் மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகமாட்டார்களா? என் றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விஷால் இதுவரை சம்பாதித்த நற்பெயரைப் பலர் கிழித்துத் தொங்கப்போட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இடம்பெற்றிருப்பது தான் விஷால் எதிர்கொண்டுள்ள அண் மைய நெருக்கடி. மதுப்புட்டி, போலிஸ் வாக னம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ராமதாஸ்.